பள்ளிவாசலின் மீது கைக்குண்டு தாக்குதல் : பொலிஸார் மறுப்பு

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலின் மீது நேற்று இரவு கைக்குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 12.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர் சலீம்தீன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பிட் நேரத்தில் இருவர் பள்ளிவாசலுக்குள் நுளைந்த்மை சீ.சீ.டி.வி. கெமராவில் பதிவாகியுள்ளது.

குறித்த இருவரும் பள்ளிவாசலுக்கு காவலில் இருந்த பொலிஸாரிடம் அனுமதி பெற்றதன் பின்னர் பள்ளிவாசலுக்குள் நுளைவதும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் பள்ளிவாசலின் மிம்பருக்கு அருகாமையில் குறிப்பிட்ட கைக்குண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது என்றார்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார், பட்டாசு வெடிப்புச் சம்பவமே இடம்பெற்றதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

உள் நாடு 4536157370388119441

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item