அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும்! எச்சரிக்கும் அதுரலிய ரதன தேரர்
http://newsweligama.blogspot.com/2014/09/blog-post_16.html
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படாவிட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் எச்சரித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கைக்கு உரிய பதிலளிக்கப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தமது யோசனைத் திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படாவிட்டால் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.