கண்டி பொலிஸ் நிலையத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர் கைது
http://newsweligama.blogspot.com/2014/09/blog-post_6.html
கண்டி பொலிஸ் நிலையத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட அதே பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் ஓரினச்சேர்கையில் ஈடுபட்ட வெளிநபர் ஒருவரும் கைது நேற்று மாலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மத்திய மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு அமைய கண்டி பொலிஸ் நிலையத்தில் சோதனையிடப்பட்டது.
பொலிஸ் நிலையத்தின் மேல் மாடியில் கதவு மூடப்பட்டிருந்த கொடுக்கல் வாங்கல் பிரிவை தலைமையக பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனையிட்டனர். இதன்போது அங்கு குறித்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் வெளி நபர் இருப்பதை கண்டுள்ளனர்.
இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் தற்போது கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான திருமணம் செய்யாத நபர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
மற்றைய நபரும் அதே பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபர் எனவும் பொலிஸார் கூறினர்.