முன்னாள் 20 அமைச்சர்கள் 8000 கோடி மோசடியில்

மகிந்த ராஜபக்ஷ அரசில் இருந்த 20 அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் 8000 கோடி ரூபா மோசடி செய்திருப்பதற்கான ஆவணங்களும் சாட்சியங்களும் கிடைத்திருப்பதால் அவர்கள் தொடர்பில் அடுத்த வாரத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவிருப்பதாக அமைச்சுச் செயலாளர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

15 மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் 20 பேர் தொடர்பில் போதிய ஆவணங்கள் கிட்டியிருப்பதாக சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்திடமிருந்து 6000 மில்லியன் ரூபா மோசடி , போக்குவரத்து அமைச்சு மூலமாக மேற்கொள்ளப்பட்ட 200 மில்லியன் ரூபா மோசடி, சஜின்வாஸ் குணவர்தனவினால் கட்டப்பட்ட பொரளையில் 6 மாடிகளைக் கொண்ட வீடு அத்துடன், அவரால் வெளிநாட்டுப் பணம் 200 மில்லியன் மோசடி போன்ற பல்வேறு ஆவணங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 20 பேரதும் ஆவணங்களை தனித்தனியே தயாரித்துவருவதோடு அவர்களோடு இணைந்து செயற்பட்ட அமைச்சுச் செயலாளர்களும் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாத்தறை, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, புத்தளம், குருநாகல், கேகாலை, அம்பாறை ,திருகோணமலை, மட்டக்களப்பு, மாத்தளை, அநுராதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இந்த அமைச்சர்களுக்கு எதிராக இந்த முறைப்பாட்டை முன்வைத்து வழக்குத் தொடரவிருப்பதாகவும் ஜயசுந்தர தெரிவித்தார்.

Related

Local 4479717665314269673

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item