கம்பியுட்டர் ‘ஜில்மார்ட்’ என்பது கட்டுக்கதை : மைத்ரிபால
http://newsweligama.blogspot.com/2014/12/blog-post_11.html
தேர்தலில் ஜனநாயக முறையில் வெற்றியீட்ட முடியாது போனால் ‘கம்பியுட்டர் ஜில்மார்ட் செய்தாவது பார்த்துக்கொள்ள முடியாதா?’ என ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்கள் மத்தியில் அண்மையில் கருத்து வெளியிட்டமை தவறானது எனவும் அவ்வாறு எதையும் அவரால் செய்யமுடியாது எனவும் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் வைத்து தெரிவித்துள்ளார் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன்.
தேர்தல் ஆணையாளர் மீது தனக்கு மிகுந்த நம்பிக்கையிருப்பதாகவும், நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடாத்த அவர் துணை நிற்பார் என்றே நம்புவதாகவும் தெரிவித்துள்ள அவர், அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க ஒரு குழு இயங்குவதாகத் தெரிவிக்கப்படுவதிலும் உண்மையில்லை என தெரிவித்துள்ளதோடு இருந்தாலும் ஒரு நாட்டின் ஜனாதிபதிய இருந்துகொண்டு மஹிந்த ராஜபக்ச இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிரணி வென்றால் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் வீணான பீதியைக் கிளப்பும் வகையில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் அவ்வாறான கலாச்சாரம் இலங்கையில் இல்லையெனவும் தெரிவித்துள்ளதோடு தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கொள்கைகளை விட “சிந்தனைகளே” மேலோங்கியிருப்பதால் தான் இவ்வாறான நிலை உருவாகியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.