சரத் பொன்சேகா மீண்டும் பாராளுமன்றத்திற்கு?
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_2.html
ஜனாதிபதி மைத்திரி – ரணில் நல்லாட்சி அராசங்கம் மீண்டும் சரத் பொன்சேகாவை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இன்னும் 72 மணித்தியாலயத்திற்குள் அவரது தண்டனையை நீக்குவதாக கூறப்பட்டது. எனினும் சில காரணங்களால் இன்னும் நீக்கப்படாமல் இருக்கின்றது.
எவரேனும் ஒரு நபருக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டால் அவர் மீதுள்ள வழக்குகள் நீக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் சரத் பொன்சேகாவிற்கு இதுவரை 08 வழக்குகள் இருப்பதுடன் அதில் பலவற்றிக்கு பொன்சேகாவினால் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
முதலில் அவ்வழக்குகளில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகள் நீக்கப்படவேண்டும். அதன் பிறகு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்ப்பட்டு விடுதலை செய்யப்பட முடிவதுடன் அவர் இழந்த அனைத்துப் பதவிகள் மற்றும் பெயர் கீர்த்திகள் மீண்டு வழங்கப்படும்.
இதற்கிடையில் அவருக்கு அமைச்சுப்பதவி கொடுப்பதாயின் அவர் பாராளுமன்றத்திற்குள் உட்பிரவேசிக்க வேண்டும்.
அவருடைய உறுப்பினர் பதவி வழக்குத் தீர்ப்பினாலேயே நீக்கப்பட்டது.
அவ்வழக்கின் தீர்ப்பு ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் நீக்கப்பட்டதன் பின் உறுப்பினர் பதவி கிடைக்கும் என்றாலும் அவருடைய உறுப்பினர் பதவிக்கு இன்னும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பென்சேகாவை மீண்டும் பாராளுமன்றத்திற்குள் கொண்டுவருவதற்காக தற்போது வெளியிடப்பட முடியாத சூட்சூம உத்திகளை கையாண்டிருப்பதுடன் அதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் புதிய அரசு வெகுவிரைவில் நடைமுறைக்கு கொண்டுவரும்.