பவித்திராவும் திலானும் மைத்திரி வீட்டில்?
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_32.html
முன்னாள் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, மற்றும் டிலான் பெரேராவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கொழும்பில் உள்ள அவரது தனிப்பட்ட வாசஸ்தலத்திற்கு நேற்று விடியற்காலை சென்று சந்தித்துள்ளார்கள்.
இவர்கள் தற்பொழுது தமது அமைச்சுக்களில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
அவர்கள் கடமை வகித்த அமைச்சுக்களில் இவர்களால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொகுதி ; ஆதரவாளர்கள் தமது வாகனங்கள், அரச வீடுகள், தேர்தல் காலத்தில் பல்வேறு கொடுக்கல் வாங்கல்கள்; மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் தேர்தல் காலத்தில் அமைச்சின் ஊடாக அனுசரனை செலவுகள் நிர்மாண ஒப்பந்தங்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் ஜனாதிபதியுடன் இப்பிரச்சினைகள் மற்றும் கட்சி மாறுதல் என பல விடயங்களை பேசியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது. - Sri Lanka Muslims