பாராளுமன்றத்தில் பிரதமர் ரணிலுக்கு காத்திருக்கும் சவால் - மஹிந்த போட்டுள்ள திட்டம்..!
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_57.html
நாடாளுமன்ற சபை முதல்வரான நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்கவை நேற்று பிரதமராக நியமித்த போதிலும் அவருக்கு நாடாளுமன்றத்தில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலைமையில், நிமல் சிறிபாடி சில்வாவுக்கு பிரதமர் பதவியை வழங்க கோரி பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கூடிய மகஜர் ஒன்றை சபாநாயகரிடம் வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.
இதனிடையே டி.எம். ஜயரத்ன பிரதமர் பதவியில் இருந்து விலகும் ராஜினாமா கடிதத்தை பெற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நேற்று பல முறை முயற்சித்துள்ளார்.
பதவி விலகும் கடிதத்தை கொடுக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி தனக்கு அறிவித்துள்ளதாக டி.எம். ஜயரத்ன கூறியுள்ளார்.