வட மத்திய மாகாண சபையும் மைத்திரி காலடியில்?
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_80.html
வட மத்திய மாகாணத்தின் தற்போதுள்ள அதிகாரம் எதிரணியினருக்கு மாறும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 27 ஆம் திகதி மாகாண சபை கூடவுள்ளது. தற்பொழுது 21 உறுப்பினர்களின் ஆதரவு, மாகாண சபையின் அதிகாரத்தை வைத்துள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இதில் மூவர் தனது ஆதரவை தற்போதைய கூட்டு அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
எதிர்க் கட்சியினருக்குள்ள ஆதரவு அதிகரிக்குமாயின் தான் தனது பதவியை விட்டுக் கொடுப்பதாக வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார். (மு)