கட்சி தாவினால் பதவி பறிபோகும்! நாடாளுமன்றத்தில் புதிய சட்டம்
http://newsweligama.blogspot.com/2015/01/blog-post_97.html
கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை உடனடியாக பறிக்கும் வகையிலான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்படவுள்ளது.
மைத்திரி அரசாங்கத்தின் நூறுநாள் செயற்திட்டத்தின் வழிகாட்டுதல் குழுவான தேசிய நிறைவேற்று சபை இது தொடர்பான இணக்கப்பாடொன்றை எட்டியுள்ளது.
இதன் பிரகாரம் அரசியல் ரீதியாக கட்சித் தாவல்களை மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை உடனடியாக பறிக்கும் வகையில் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படவுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இச்சட்ட மூலம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இச்சட்ட மூலம் தொடர்பான இணக்கப்பாட்டுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடமும் இணக்கம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.