உயர்தர வினாத்தாள் திருத்தும் பணி இன்று ஆரம்பம்

https://newsweligama.blogspot.com/2014/08/blog-post_188.html
தெரிவு செய்யப்பட்ட 10 பாடசாலைகளில் இன்று தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதிவரை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் காலத்தில் கொழும்பு ரோயல், விசாகா, களுத்துறை திஸ்ஸ மத்திய கல்லூரி, இரத்தினபுரி பர்கசன் உயர் பாடசாலை, குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயம், குளியாபிட்டி சென் ஜோசப் வித்தியாலயம், கோகாலை மகளிர் வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட், காலி வித்தியாலோக்க மற்றும் பதுளை விகாரமகாதேவி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் திருத்த இரண்டாம் கட்டப் பணிகள் செப்டெம்பர் 14ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரையும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் பாடசாலைகள் ஒக்டோபர் 2ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.