வீண் விரயத்தினை தவிர்ப்போம்!
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_27.html
அஸ்ஸலாமு அலைக்கும்
புனிதமிகு ரமழான் மாதத்தின் கடைசி தருணத்தில் இருக்கும் நாம், இம்முறை எமது நாட்டிலும், பாலஸ்தீனத்திலும் எமது சொந்தங்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இனவாத ஒடுக்கு முறைக்கு முகங்குடுத்தவர்கலாகவும் அவர்களின் தேவைக்காக ரமழான் முழுதும் உதவி செய்தும், துஆ கேட்டவர்களாகவும் பயணித்துக்கொண்டிருக்கிறோம். இதில் நமது அடுத்த இலக்காக நாம் கொண்டிருப்பது இன்னும் ஓரிரு நாட்களில் நம்மை நோக்கி வரும் ஈகைப்பெருநாளே.
ஒரு மாத காலம் பசித்து, தாகித்து, அல்லாஹ்வை நெருங்கியிருந்து பல பயிற்சிகளை பெற்ற நாம் இந்த ஈகை தினத்தை கொண்டாடுவதற்கு பலவாறு ஆயத்தமாகி இருப்போம்.
மகிழ்ச்சியாக இத்தினத்தை கழிப்பதற்கு உடன்படும் நாம், சில வேளைகளில் நம்மை அறியாமல் பல கோணங்களில் வீண் விரயத்தில் நமது பணத்தையும் நேரத்தையும் செலவழிக்கின்றோம். நமது தேவையை மிஞ்சிய செலவு எப்போதுமே வீண் விரயமாகும். இதை தவிர்ப்பது இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கின்றது.
இன ரீதியான இன்னலுக்கு முகம் கொடுத்திருக்கும் நாம் அந்நிய மக்களுக்கு மத்தியில் நமது வீண் விரயத்தை வெளிப்படுத்துவதால், அவர்களுக்குள் நம் மீதான காழ்ப்புணர்ச்சி அதிகரித்து நம்மீதான பிழையான பின்னூட்டலையே வழங்கும்.
ஆகவே 100% பணத்திலும், நேரத்திலும் நமது வீண்விரயத்தை தவிர்த்து முடிந்தால், பாதிக்கப்பட்ட நமது சொந்தங்களுக்கு அதன் மூலம் உதவி செய்ய ஒன்று சேருங்கள். ஒவ்வொருவருடைய ஹலாலான எண்ணங்களுக்கும் இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் கூலியை பன்மடங்காக்கி தருவானாக. ஆமீன்.
அஹமட் மஹ்ரூப்