ஹமாஸ்- அல் கஸ்ஸாமின் புதிய கமாண்டோ தாக்குதல்கள் இஸ்ரேலுக்குக் கூறுவதென்ன?
http://newsweligama.blogspot.com/2014/07/blog-post_5651.html
(பிராந்தியப் பொறிமுறைப் பொறியியலாளர்)
உலகில் உளவுத் தொழிநுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் இஸ்ரேலை, ஹமாஸின் ஈராணுவப் பிரிவான 'இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம்' இன் ஆழ ஊடுருவும் 'கமாண்டோ' குழுக்கள் கதிகலங்க வைத்துவிட்டன!
காஸாவில் நடக்கும் இஸ்ரேலிய அத்துமீறலின் உஷ்ணத்தை இஸ்ரேலின் நகரங்களுக்குள் தரைவழியே நகர்த்தி இவர்கள் நடத்திய தாக்குதல்கள்,பொது ஊடகங்களில் வெளிவராத போதிலும் இவர்களின் போர் தந்திரோபாயம் மற்றும் போரிடும் ஆற்றல் என்பவை இராணுவ ஆய்வுமட்டத்தில் பெருமுக்கியத்துடன் நோக்கத் தக்கவையாக மாற்றி விட்டன!!
ஜூலை 08ம் திகதி, தென் இஸ்ரேலிய நகரான அஷ்கலானின் தமது இஸ்ரேலிய இலக்கு நிலைகளை நோக்கி, ஆரம்பத்தில் பாதாளப் போர் (Element of Covered Strike) மூலகங்களுடன் கடல்சார் (Seaborne) ஆழ ஊடுருவலை மேற்கொண்ட 'கமாண்டோ' பிரிவு இலக்குப் புள்ளியை அண்மித்து, அதிரடிப் பாய்ச்சலாகத் தாக்குதலைத் தொடுத்தது.
இவ்வதிர்ச்சியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் மீள்வதற்குள் தமது நடவடிக்கையின் இரண்டாம் கட்டமான அவ்விடத்திலேயே நிலைக்கொண்டு 'டெல் அவிவ்- பென்குரியன்' விமானத் தளத்திற்கும். ஜெருஸலத்திற்குமான குறுந்தூரத் (Short Range)தைப் பெற்று 'ரொக்கட்' தாக்குதலைத் தொடுத்தனர்!
'ரொக்கட்' தாக்குதல் வானில் முடக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தாலும் சேத விபரம் உறுதிப்படுத்தப்படவில்லை! இதேபோன்று 'சோபா' மற்றும் பிற இடங்களிலும் அதிரடித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன! அதிர்வு மூலகத்தின் (Element of Surprise) மூலம் பெறும் வாய்ப்பினை முன் நிறுத்தி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதால்' கமாண்டோ'க்கள், தமது நிலைகளுக்கப் பாதுகாப்பாகத் திரும்ப முடியுமானதுடன் இராணுவ வாகனத் தொடரணி மற்றும் படைநிலைகள் அதிரடியாகத் தாக்கப்பட்டு, இஸ்ரேலியத் துருப்புக்களுக்கும் தளவாடங்களுக்கும் பெருஞ் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன!!
எதிரியின் நிலத்தில் ஆழ ஊடுருவி நடத்தப்படும் 'கமாண்டோ' தாக்குதல்கள் இஸ்ரேலியத் துருப்புக்களின் போரிடும் மனோ வலிமையை பலவீனப்படுத்தியதுடன் தமது சுற்று வட்டாரம் குறித்த பதற்ற நிலையை அதிகரிக்கும்!
மேலும்,சில நேரம் குழுக்களாக அல்லது தனிநபராக திட்டமிடப்பட்ட இலக்குகளை நோக்கி நகர்ந்து.. தாங்கிகள், இராணுவ வாகனத் தொடரணிகள், காவல் அரண்கள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படைநிலைகள் என்பன இலக்கு வைக்கப்படக் கூடும்!
இவ்வகைத் தாக்குதல்கள் அதிகரிக்கும்போது, தரையினூடாக ஆக்கிரமிப்பைத் தொடங்கியிருக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கு நீண்ட நாட்கள் காஸாவினுள் நிலைக் கொள்வது கடினமாவதுடன் தனது படைகளைத் திருப்பிக் கொள்வதற்கு அழுத்தம் கொடுக்கும்!
காஸாவினுள் இஸ்ரேலியப் படையினர் இன்னும் 18000 பிரத்தியேகப் படையினருடனும் தாங்கிகள்,ஆட்லரிகள் மற்றும் விமானப் படையின் உதவியுடன் ஹமாஸையும் அதன் இஸ்ரேலிற்கான ஊடுருவல் சுரங்கப் பாதைகளையும் தேடி தரைவழித் தாக்குதலைத் தொடுத்து முன்னேறுகின்றனர்!
இதனை ஹமாஸ், தமது அதிரடித் தாக்குதல்களின் மூலம் முறியடித்து இஸ்ரேலியப் படைகளின் இறப்பு மற்றும் காயமடையும் வீதத்தை அதிகரிப்பதுடன் படையினரைக் கைதிகளாகப் பிடித்து அதற்குப் பகரமாக சிறையில் வாடும் பலஸ்தீனர்களை விடுவிக்கவும் முயற்சிக்கும்!
மேலும், ஒரு நிலையில் இருந்து மட்டும் 10 நிமிடங்களுக்கு ஒரு ரொக்கட்' என்ற வீதத்தில் ஏவும் தமது ஆற்றலுடன் நீண்ட தூர 'ரொக்கட்'களின் மூலம் இஸ்ரேலினுள்ளான விமானத் தளங்கள், படைநிலைகள் மற்றும் பொருளாதார நிலைகளை நோக்கி மேலும் தாக்குதல் நடத்தப்படலாம்!
இதன் மூலம் இஸ்ரேலின் நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் உல்லாசப் பயணத் துறை என்று சமூகப் பொருளாதார நிலைகளுக்கு ஹமாஸ் தாக்குதல் தொடுக்கும்!
இது குறித்து ஹமாஸின் பேச்சாளர் சமீ அபூ ஸுஹ்ரி 'இஸ்ரேல் தமது தரைவழிப் படையெடுப்பின் விலையைச் செலுத்துவார்கள்' என்றும் இப் படையெடுப்பு எம்மைப் பயமுறுத்தாது! ஆனால், இஸ்ரேலியப் படைகளை காஸா சேற்றில் மூழ்கடிக்கும்!' எனக் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது!!