உலமா சபையே, தலைப்பிறையில் இனியும் விளையாட வேண்டாம்

சென்ற வருடம் நோன்புப் பெருநாள் எப்படி சீரழிக்கப் பட்டு குழப்பத்திற்கு உள்ளானது என்ற கசப்பான அனுபவமும், உண்மையை மறைக்க ரிஸ்வி முப்தி ஆக்ரோஷமாக ஆற்றிய வானொலி உரையின் கர்ண கொடூரமும் (சத்தமும்) இன்னுமும் நெஞ்சை விட்டு அகலாத நிலையில், மீண்டுமொரு நோன்புப் பெருநாளை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியிருக்கின்றது.


இந்த சந்தர்ப்பத்தில், உலமா சபையிடம் பணிவோடு வேண்டிக் கொள்வது, கடந்த வருடம் தெரிந்துகொண்டே செய்த தவறை இந்த முறை செய்ய வேண்டாம் என்பதே. தொடர்பு சாதனங்கள், சமூக ஊடகங்கள் என்று தகவல் வேகமாக பரவும் இன்றைய சூழ்நிலையில், காணும் பிறையை நீங்கள் ஒழித்து வைக்க முடியாது என்கின்ற யதார்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில முக்கிய புள்ளிகளின் தேவைகளுக்காக அல்லாஹ்வின் மார்க்கம் தொடர்பான ஒரு முக்கிய விடயத்தை ஒழித்து மறைத்து முழு முஸ்லிம் சமூகத்தையும் இருட்டில் வைக்க இனியும் முயல வேண்டாம், அது சாத்தியப்படவும் முடியாது. அவ்வாறான வீண் முயற்சி சமூகத்தில் மேலும் குழப்பங்களையே அதிகரிக்கும்.

இலங்கை வானொலியை மட்டும் நம்பியிருந்த ஒரு காலம் இருந்தது, ஆனால் அது மலையேறி விட்டது. ஆகவே, பிறை விடயத்தில் நீங்கள் முற்படுத்தல்கள் அல்லது பிற்படுத்தல்களை மேற்கொண்டால், ஏற்கனவே முஸ்லிம்களிடம் நன்மதிப்பை இழந்து வரும் உங்களின் சபை, முற்றாகவே தூக்கியெறியப் பட்டுவிடும் சாத்தியம் உள்ளது என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

காண்கின்ற பிறை தொடர்பான உண்மையான தகவலை வெளியிட்டு, முஸ்லிம்களை உரிய தினத்தில் பெருநாளை கொண்டாட அனுமதித்தால், உங்கள் தலைவர்களுக்கு கைத்தொலைபேசியை off செய்துவிட்டு, ஒழிந்து கொள்ள வேண்டிய தேவையோ, ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் அமைச்சர்களின் தொலைபேசி அழைப்புகளுக்குக் கூட பதிலளிக்காமல் பதுங்கிக் கொள்ள வேண்டிய தேவையோ, அடுத்த நாள் வானொலியில் உயர்ந்த சத்தத்தில் உண்மையை மறைக்க "கிண்ணியாவிற்க்கு சுனாமி (நிவாரணம்) கொடுத்தோம், அழுத்கமைக்கு அரிசி கொடுத்தோம், பேருவளைக்கு பேரீத்தம்பழம் கொடுத்தோம்" என்று கூச்சலிடவும் தேவையில்லை.


இன்று இந்த நாட்டில் முஸ்லிம்கள் இருக்கின்ற ஒரு பதற்றமான நிலையில், ஷவ்வால் மாத தலைப்பிறை தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு பொருத்தமற்ற, நேர்மையற்ற தீர்மானமும், மேலும் சிக்கலான நிலமையைகளையும், வீண் பிரச்சினைகளையும், பதற்றங்களையுமே தோற்றுவிக்கும் என்பதனை கட்டாயமாக கவனத்தில் கொள்ளும்படி இலங்கையின் அனைத்து சாதாரண முஸ்லிம்கள் சார்பில் உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கின்றேன்.

உலப்பனை ஷாமில்

Related

Articles 8126466588728024983

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item