10,400 போலி வைத்தியர்கள் ; வைத்திய சங்கம் எச்சரிக்கை
http://newsweligama.blogspot.com/2014/08/10400.html
இலங்கை பூராவும் 10,400 போலி வைத்தியர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியர் சங்கத்தின் போலி வைத்தியர்களைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.
இலங்கை வைத்திய சபை அல்லது ஆயுர்வேத அல்லது ஹோமியோபதி சட்டத்தின் அடிப்படையில் பதியாத இவர்களைப் போன்ற போலி வைத்தியர்களிடம் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டுமென,வைத்தியர் சங்கச் செயலாளர் டாக்டர் ஹரித அளுத்கே எச்சரித்துள்ளார்.