15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: பொகவந்தலாவையில் சம்பவம்
http://newsweligama.blogspot.com/2014/08/15.html
பொகவந்தலாவை பொகவான தோட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 24 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 2 ஆம் திகதி இடம் பெற்றுள்ளதாகவும் சம்பவம் குறித்து பொதுமக்களால் 1919 என்ற இலக்கதின் மூலம் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகப்பு அதிகார சபைக்கு வழங்கபட்ட தகவலை அடுத்து குறித்த திணைக்களத்தின் ஊடாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவலை வழங்கபட்டமையையடுத்தே குறித்த சந்தேக நபர் நேற்று கைது செய்யபட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமிக்கும் சந்தேக நபருக்கும் காதல் உறவு இருந்ததாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை பாதிக்கபட்ட சிறுமி மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதாரவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் அஜர்படுத்தபட்டதுடன் , எதிர் வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். - virakesari