இரண்டு தசாப்தங்களின் பின்னர் ஒக்டோபரில் யாழ்தேவி யாழ்.நோக்கிப் பயணம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_264.html
இரண்டு தசாப்தங்களின் பின்னர் யாழ்தேவி ரயில், யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ஒக்டோபர் மாதம் மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.
ஒக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் யாழ்ப்பாணம் நோக்கி யாழ்தேவி பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
புதிதாக நிர்மானிக்கப்பட்ட ரயில் தண்டவாளங்கள் மற்றும் நவீன சமிக்ஙை கட்டமைப்புகளின் பணிகள் முடிவடையும் தறுவாயை எட்டியுள்ளதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
புதிய ரயில் பாதையின் பணிகள் பூர்த்தியடைந்த பின்னர், மணித்தியாலத்திற்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிகள் இலகுவாக யாழ்ப்பாணத்திற்கான பயணிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.
இந்த புனரமைப்பு பணிகளுக்காக இலங்கை மத்திய வங்கி 85 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், இந்திய அரசாங்கம் கடனுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளது.
நாட்டில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில், இடம்பெற்ற தாக்குதல்களினால் வடபகுதி ரயில் மார்க்கம் முற்றாக சேதமடைந்திருந்த நிலையில், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து வட பகுதி ரயில் மார்க்கத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.