வருட இறுதிக்குள் 2,285 புதிய பஸ் வண்டிகள் சேவையில்
http://newsweligama.blogspot.com/2014/08/2285.html
பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் பொருட்டு இவ்வருட இறுதிக்குள் 2,285 புதிய பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன் நிமித்தம் கடந்த மாதம் 300 புதிய பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இம்மாதம் மேலும் 500 பஸ் வண்டிகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதேவேளை, 500 பஸ் வண்டிகள் செப்டெம்பரிலும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 900 பஸ் வண்டிகளும் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன் 15 முதல் 20 வருடங்கள் பழைமை வாய்ந்த தற்போது சேவையில் ஈடுபடும் பஸ்களை பயன்படுத்தாதிருக்கவும் பஸ்களின் பராமரிப்பு குறித்த புதிய நடைமுறைகளை அமுல்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (virakesari)