சட்டவிரோதமான முறையில் பேரணியாக செல்லும் ஐ.ம.சு.கூ: கபே
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_43.html
ஊவா மாகாண சபைத் தேர்தல்களுக்காக பதுளை மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யவதற்காக சட்டவிரோதமான முறையில் மஹியங்கனை வரை பேரணியாக வந்த ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பினர் தற்போது கந்தகெடிய பாடசாலைக்கு அருகில் இருப்பதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பேரணியில் 80 அல்லது அதற்கு மேற்பட்ட வாகனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முற்பகல் லோக்கல் ஓயா அருகில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளை
மிரட்டியதாக கூறப்படும் நபர்களும் இதில் இருப்பதாக தெரியவந்துள்ளது எனவும் அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பதுளை சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் கபே அமைப்பு தெரிவித்துள்ளது. (virakesari)