யாழில் ஒரு வாரத்திற்குள் 235 பேர் கைது
http://newsweligama.blogspot.com/2014/08/235.html
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 235 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
வாள்வெட்டு, கோஷ்டி மோதல், தாக்குதல்கள் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய 33 பேரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போதே பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.
யாழ். பிராந்தியத்திற்குள் குற்றச்செயல்களை தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் பல்வேறு விசேட திட்டங்களை பொலிஸார் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.