இலங்கையில் போதைப்­பொ­ருள்­ கடத்துவது முஸ்­லிம்கள் என நிரூ­ப­ன­மா­கினால் அவர்­க­ளுக்கு பகி­ரங்­க­மாக ஷரிஆ சட்­டப்­படி சிரச்­சேதம் செய்­வ­தற்­கான தண்­ட­னையை வழங்­கலாம்.

ஹெரோயின் போதைப்­பொ­ருள்­களை முஸ்லிம்கள்தான் கடத்துகின்றார்கள், விற்பனை செய்கின்றார்கள் என கூற முடியுமானால் ஏன் அவர்களை கைது செய்ய முடியாது. இன ரீதியான பாகுபாடாக கூறுவது மிக
தவறானதாகும் என மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர் ஜெய்னுல் ஆப்தீன் தெரிவித்தார்
மத்­திய மாகாண சபையின் மாதாந்த கூட்டம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பள்­ளே­கலையில் சபைத் தலைவர் மகிந்த அபேகோன் தலை­மையில் நடை­பெற்ற போது அங்கு உரை­யாற்­று­கையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்
இந்­நாட்­டிற்குள் கோடிக்­க­ணக்­கான ரூபா பெறு­ம­தி­யான போதைப் பொருள்­களை முஸ்­லிம்கள் கடத்தி வரு­வ­தா­கவும் அவர்­களே அவற்றை விற்­பனை செய்­வ­தா­கவும் சில குழுக்கள் துவே­ச­மான வகையில் பிர­சாரம் செய்து வரு­கின்­றன. இலங்­கையில் இரண்­டா­வது பிர­ஜைகள் வாழு­கின்ற கம்­பளை பிர­தே­சங்­க­ளிலும் முஸ்­லிம்­களே போதைப்­பொ­ருள்­களை விற்­பனை செய்­வ­தா­கவும் பிர­சா­ரங்கள் நடை­பெ­று­கின்­றன.
சிறு­சிறு குற்­றங்­கள் புரி­ப­வர்­க­ளை­யெல்லாம் கைது செய்ய முடி­யு­மானால் இவர்­களை ஏன் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்த முடி­யாது? இவ்­வா­றான கடத்­தல்­களில் யார் யார் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதை கண்­ட­றிய முடி­யாதா ?
பாட­சாலை மாண­வர்கள் எல்லாம் போதைப் பாவ­னைக்கு அடி­மை­யானால் நாட்டின் நிலைமை என்­ன­வாகும்? முஸ்­லிம்கள் ஒரு­போதும் தேசத்­து­ரோக செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் அல்ல. போதைப்­பொ­ருள்­களை முற்­றாக ஒழிக்க வேண்டும் இதன் பொருட்டு இதில் ஈடு­ப­டு­ப­வர்கள் முஸ்­லிம்கள் என்­பது நிரூ­ப­ன­மா­கினால் அவர்­க­ளுக்கு பகி­ரங்­க­மாக ஷரி ஆ சட்­டப்­படி சிரச்­சேதம் செய்­வ­தற்­கான தண்­ட­னையை வழங்­கலாம்.
இவர்கள்தான் கடத்துகின்றார்கள், விற்பனை செய்கின்றார்கள் என கூற முடியுமானால் ஏன் அவர்களை கைது செய்ய முடியாது. எனவே இன ரீதியான பாகுபாடாக கூறுவது மிக தவறானதாகும் என்­றார்.

Related

உள் நாடு 1967605023261597972

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item