இணைய மோசடிகள் தொடர்பில் 1,300 முறைப்பாடுகள்
http://newsweligama.blogspot.com/2014/08/1300.html
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இணையத்தள மோசடிகள் தொடர்பில் 1,300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சமூக இணையத்தளங்கள் தொடர்பிலேயே அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிடுகின்றார்.
தமது பெயர்களில் வேறு நபர்கள் போலியான கணக்குகளை வைத்திருத்துள்ளமை குறித்து அதிக எண்ணிக்கையான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பேஸ்புக் சமூக இணையத்தளம் குறித்த முறைப்பாடுகளை நேரடியாகவே பேஸ்புக் நிறுவனத்திற்கு அல்லது தமது பிரிவிற்கு தெரியப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
இணையத்தள மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை எவ்வாறு செய்வது என்பது பற்றிய ஆலோசனைகளை கணனி அவசர நடவடிக்கைப் பிரிவின் என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்புப் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.