அடுத்த 24 மணி நேரத்தில் நாடு முழுதும் கடும் மழை
http://newsweligama.blogspot.com/2014/08/24.html
அடுத்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், வட மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் என்பவற்றில் பலத்த மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலி மற்றும் மாத்தரைப் பகுதிகளிலும் பலத்த மழையினை எதிர்பார்ப்பதாகவும் இடி மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் இருந்து காலி வரைக்கும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரைக்கும் உள்ள கடற்பகுதியில் காற்றின் வேகம் 60 கி.மீ வரை அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.