இந்தியாவுக்கு தர்ம அடி கொடுத்த இங்கிலாந்து 3-1 எனத் தொடரைக் கைப்பற்றியது
http://newsweligama.blogspot.com/2014/08/3-1.html
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸினாலும் 244 ஓட்டங்களாலும் படுதோல்வி அடைந்ததுடன் தொடரையும் இழந்தது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 148 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகப்படியாக தோனி 82 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்னர் தனது முதலாவது இன்னின்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் சதத்தின் உதவியுடன் 486 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 94 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.