மொனராகலையில் பலத்த காற்று; 26 வீடுகளுக்கு சேதம்
http://newsweligama.blogspot.com/2014/08/26.html
மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 26 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
மொனராகலை சிரிகல கீழ்ப்பிரிவு குடியிருப்பின் 26 வீடுகளுக்கு நேற்று வீசிய பலத்த காற்றினால் சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மொனராகலை மஹாநாம தேசிய பாடசாலையின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால், பாடசாலையில் இயங்கும் உயர்தர பரீட்சை மத்திய நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
மின்கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கம்பங்களின் மீது மரம் முறிந்து வீழ்ந்து அவற்றுக்கு சேதம் ஏற்பட்டதுடன், தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.