மோடியிடமும் ஜெயலலிதாவிடமும் அரசாங்கம் மன்னிப்பு கோரியமை இலங்கைக்கு தலைகுனிவு

இந்­தியப் பிர­தமர் மோடி­யி­டமும் ஜெய­ல­லி­தா­வி­டமும் அர­சாங்கம் மன்­னிப்புக் கோரி­ய­மை­யா­னது எமது தாய்நாடான இலங்­கையை தலை­கு­னியச் செய்த – நாட்­டுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வ­மாகும் என ஜன­நா­யக தேசியக் கூட்­ட­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினரும் ஜே.வி.பி.யின் தலைவருமான அநுரகுமார திஸா­நா­யக நேற்று சபையில் குற்றம் சாட்­டினார்.

வாஷிங்­ட­னுடன் இர­க­சியத் தொடர்­பு­களை அர­சாங்­கமும் பேணிவரு­கி­றது. எனவே தான் இஸ்­ரேலின் பாலஸ்­தீ­னத்­துக்கு எதி­ரான காட்டுமிராண்டித் தாக்­கு­தல்­களை கண்­டிக்­காது
நழுவல் போக்கே கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வெளி­வி­வ­கார அமைச்சு தொடர்பில் சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்றும் போதே அனுர குமாரா திஸா­நா­யக்க எம்.பி. இதனைத் தெரி­வித்தார்.

அவர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்;

பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­தளம் என்­பது நாட்டின் தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­பட்ட நாட்டுத் தலை­வரின் கண்­கா­ணிப்பு உள்ள முக்­கிய இணையத் தள­மாகும். அவ்­வா­றா­ன­தொரு வெப் தளத்­தி­னூ­டாக இந்­தியப் பிர­தமர் மோடி மற்றும் ஜெய­ல­லி­தாவை கொச்சைப் படுத்தி கேலிச் சித்­திரம் வெளி­யி­டப்­பட்­டது.

இது எவ்­வாறு நிகழ்ந்­தது? இச் சம்­ப­வ­மா­னது இரண்டு பேர்களை அல்ல ஒரு நாட்டை கொச்­சைப்­ப­டுத்­தி­ய­மைக்கு சமாந்தரமாகும்.
இறு­தியில் என்ன நடந்­தது? அர­சாங்கம் மோடி­யி­டமும் ஜெய­ல­லி­தா­வி­டமும் மன்­னிப்பு கோரி­யது.

இது அர­சாங்­கத்­திற்கு பிரச்­சி­னை­யல்ல. ஆனால் எமது தாய் நாடான இலங்­கையை தலை­கு­னியச் செய்து அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­திய சம்­ப­வ­மாகும்.


உள்­நாட்டில் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ராக கடு­மை­யான கருத்­துக்­களை வெளி­யிட்டு தோலு­ரிக்கும் அர­சாங்கம் இர­க­சி­ய­மாக வாஷிங்­ட­னுடன் தொடர்­பு­களை பேணி வரு­கின்­றது.
அமெ­ரிக்­காவின் பல நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பணத்தை கொடுத்து ஆலோ­ச­னைகள் பெறப்­ப­டு­கின்­றன.

பாலஸ்­தீ­னத்தின் நண்­பர்கள் என அர­சாங்கம் கூறிக்கொள்­கின்­றது. ஆனால் வாஷிங்­ட­னிடம் மண்­டி­யிட்­டுள்ள அர­சாங்கம் இஸ்­ரேலின் மொஸாட் பாலஸ்­தீ­னத்தில் செய்யும் அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்­காது அதனை எதிர்த்து பிரே­ரணை எத­னையும் நிறை­வேற்­றாது நழுவல் போக்கை கடைப்­பி­டிக்­கின்­றது.

அர­சாங்கம் நிய­மித்த காணாமல் போனோர் விசா­ரணை ஆணைக் குழு­விற்கு ஆலோ­ச­னை­களை வழங்க மூவ­ர­டங்­கிய வெளி­நாட்டு நிபு­ணர்­களை அரசு நிய­மித்­துள்­ளது.
இது வாஷிங்­டனின் அழுத்தம் கார­ண­மா­கவே இடம்­பெற்­றது.

இந்த நிபு­ணர்­க­ளுக்கு அதா­வது ஒரு­வ­ருக்கு கொடுப்­ப­ன­வாக ரூபா 6 1ஃ2 கோடி வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறிய வரு­கி­றது. இது தொடர்பில் அர­சாங்­கத்தின் பதில் என்ன?

பாலஸ்­தீ­னத்தின் நண்­பர்கள் எனக் கூறிக் கொள்ளும் அர­சாங்கம் இஸ்ரேல் - பாலஸ்­தீன பிரச்­சினை தொடர்­பி­லான தற்­போ­தைய தனது நிலைப்­பாட்டை அறி­விக்க வேண்டும்.

இன்று வெளி­வி­வ­கார அமைச்சு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கிளைச் சங்­க­மாக மாறி விட்­ட­தோடு அர­சாங்க தரப்­பி­னரின் உற­வி­னர்­களின் கூடா­ர­மாக மாறி விட்­டது.
இலங்­கைக்­கான தூது­வர்­க­ளாக வெளி­நா­டு­களில் 49 பேர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் 14 பேர் மட்­டுமே வெளி­நாட்­ட­லு­வல்கள் தொடர்­பான கற்கை நெறி­களை மேற்­கொண்ட திற­மை­யா­ன­வர்கள் ஆவார்கள்.

ஏனையோர் அனை­வரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் அமைப்­பா­ளர்கள் பதவி வகித்­த­வர்கள் அர­சாங்க உயர் மட்­டத்­தி­னரின் நெருங்­கிய உற­வி­னர்கள். சகோ­த­ரர்கள் மட்­டு­மல்­லாது அமைச்­சர்­களின் சகோ­த­ரர்கள் உற­வி­னர்கள் என அர­சியல் ரீதி­யா­ன­வர்­களே தூது­வர்­க­ளா­கவும் தூத­ர­கங்­களின் செய­லா­ளர்­க­ளா­கவும் அதி­கா­ரி­க­ளா­கவும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

அரசின் சர்­வ­தி­காரம் மனித உரிமை மீறல்­களை பயன்­ப­டுத்தி அமெ­ரிக்கா உட்­பட மேற்­கு­லக நாடுகள் இலங்­கைக்கு எதி­ரான நிகழ்ச்சி நிரலை தயா­ரித்து அதனை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கி­றது.

எமது நாட்டை உல­கி­லி­ருந்து தனி­மைப்­ப­டுத்தி ஓரங்­கட்ட திட­சங்­கற்பம் பூண்டு செயல்­ப­டு­கின்­றது. ஆனால் எமது நாட்­டுக்கு எதி­ரான வெளி­நாட்டு சக்­தி­களின் சவால்­க­ளுக்கு முகம் கொடுத்து வெற்றி பெறக்­கூ­டிய திற­மை­யா­ன­வர்கள் வெளி­நாட்டு சேவையில் இல்லை.

எனவே இவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு கடி­தங்­களை கோரிக்­கை­களை எழு­திக்­கொ­டுக்­கவும் உரை­களை எழுதிக் கொடுக்­கவும் பல கோடி ரூபாய் செலவில் அமெ­ரிக்­காவில் பல நிறு­வ­னங்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன.

உள்­நாட்டில் அமெ­ரிக்­காவை விமர்­சிக்கும் அர­சாங்கம் இர­க­சி­ய­மாக தொடர்­பு­களை பேணி வரு­கின்­றது. நவீன தகவல் தொழில்­நுட்பம் பொரு­ளா­தாரம் போக்­கு­வ­ரத்து என பல துறை­க­ளிலும் உலகம் சுருங்கி வரு­கி­றது. நாடு­க­ளுக்­கி­டை­யே­யான இடை­வெ­ளி­களை குறைத்து உலகசந்தையும் ஓரி­டத்­திற்குள் வந்து சேர்ந்­துள்­ளது.

ஆனால் எமது வெளி­வி­வ­கார சேவை எங்கு செல்­கி­றது? திற­மை­யற்­ற­வர்­க­ளி­னதும் தேயிலை வியா­பா­ரி­க­ளி­னதும் நிதி மோச­டிக்­கா­ரர்கள் கருக்­க­லைப்­புக்­களை மேற்­கொள்ளும் திற­மை­யற்­ற­வர்­களின் கூடா­ர­மாக மாறிக்கொண்டுள்ளது.

வெளி­வி­வ­கார அமைச்சின் பேரா­சி­ரியர் சிறந்த கல்வி மான். தான் சார்ந்­துள்ள அர­சாங்­கத்தை பாது­காப்­ப­தற்­காக சிங்­கள விதானங்களை திற­மை­யாக பயன்­ப­டுத்தக் கூடி­யவர்.
ஆனால் இன்று வெளி­வி­வ­கார அமைச்­ச­ரி­ட­மி­ருந்து வெளி­வி­வ­கார சேவை தொடர்­பி­லான அதி­கா­ரங்கள் பறிக்­கப்­பட்­டுள்­ளது.

அவை திற­மை­யற்­ற­வர்­களின் கைகளில் சிறைக் கைதி­யா­கி­யுள்­ளன. வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மேடைப் பேச்­சா­ள­ராக மாறி­விட்டார்.
மறைந்த வெளி­வி­வ­கார அமைச்சர் லக் ஷ்மன் கதிர்­காமர் இவ்­வாறு மாற­வில்லை. அவர் தனது அமைச்சுப் பத­வியை நாட்­டுக்­காக திற­மை­யாக பயன்­ப­டுத்­தினார்.

அமைச்­சர்கள் தமது பிள்­ளை­களை மாகாண சபை­க­ளுக்கு அனுப்­பு­வது போன்று வெளி­நாட்டு சேவை­க­ளுக்குள் புகுத்தி அர­சியல் மய­மாக்­கி­யுள்­ளனர்.

அத்­தோடு வெளி­நாட்டு தூதரகங்களில் திறமையாக பணியாற்றிய அனுபவசாலிகளை தமிழ் மற்றும் சிங்கள முஸ்லிம் அதிகாரிகளில் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டு கொழும்பில் வெளிவிவகார அமைச்சுக்குள் வரையறுக்கப்பட்டுள்ளனர். ஏன் வெளிநாட்டு சேவையை இவ்வாறு சீர்குலைக்கின்றீர்கள்?

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொறுப்பு மிக்க முக்கிய பதவியான தலைமைப் பதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வகிக்கின்றார். ஆனால் அவ்வாறான முக்கிய பதவியை வகிக்கும் ஜனாதிபதி அதன் முக்கிய நிகழ்ச்சியான பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் பாதுகாப்பு பிரச்சினை என அரசு கூறுகிறது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

Related

உள் நாடு 3731133744243655130

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item