கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தேனுக்க விதானகம உள்ளிட்ட சிலரை கைதுசெய்ய உத்தரவு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_45.html
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக்க விதானகம ஊவா மாகாண சபை வேட்பாளர் அனுர விதானகம உள்ளிட்ட சிலரை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் நேற்று முன்னெடுக்கப்பட்ட வாகன தொடரணியை தடுப்பதற்கு, தேர்தல் அதிகாரிகள் முற்பட்டபோது, அமைதியற்ற முறையில் செயற்பட்டதாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.