சட்டவிரோத சுவரொட்டிகளை அகற்ற 50 இலட்சம் ஒதுக்கீடு
http://newsweligama.blogspot.com/2014/08/50.html
ஊவா மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்காக பொலிஸாருக்கு 50 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளரினால் பொலிஸாருக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.