சென்னையில் இலங்கையர் 7 பேரின் கடவுச்சீட்டுக்கள் மீட்பு; விசாரணைகள் ஆரம்பம்
http://newsweligama.blogspot.com/2014/08/7_13.html
சென்னை அடையாறு பகுதியில் இலங்கையர்களின் கடவுச்சீட்டுக்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அடையாறு பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த பையொன்றில் இருந்து இலங்கையர்களின் 07 கடவுச்சீட்டுக்கள் நேற்றிரவு மீட்கப்பட்டிருந்தன.
இந்த கடவுச்சீட்டுக்கள் தவறவிடப்பட்டனவா? அல்லது போலியானவையா? என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு போலியான கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி, ஆட்கடத்தலில் ஈடுபடும் குழுவினர் சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
ஆட்கடத்தல் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடவுச்சீட்டு மீட்க்கப்பட்ட சம்வபவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என அடையாறு பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக இந்திய தகவல்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.