வாழைச்சேனையில் 950 கிலோ கிராம் நிறையுள்ள சுறா (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/08/950.html
வாழைச்சேனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற படகிலிருந்து திங்கட்கிழமை 950 கிலோ கிராம் நிறையுடைய கொடிச்சுறா பிடிபட்டுள்ளது.
வாழைச்சேனையைச் சேர்ந்த என்.எம்.சம்சுதீன் என்பவரின் படகில் சென்ற மீனவர்களே இம்மீனை ஆழ்கடலிருந்து கரைக்கு கட்டி இழுந்து வந்துள்ளனர்.
இம்மீன் கருவாட்டுக்குப் பயன்படுத்தக் கூடியதாக இருக்குமென்று படகு உரிமையாளர் என்.எம்.சம்சுதீன் தெரிவித்தார்.