நீர்மட்டம் தொடர்பில் மலையகத்தில் மக்களுக்கு அறிவுறுத்தல்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_0.html
மலையகத்தில் தொடர்ந்தும் அதிக மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்டப்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள கெனியன், மவுசாகலை, மேல்கொத்மலை, லக்க்ஷபான மற்றும் நோட்டன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வான் பாயும் அளவிற்கு உயர்வடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிறி
குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படகூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதியிலுள்ள மக்கள் அவதானத்துடள் செயற்படுமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர்டீ.பீ.ஜீ. குமாரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.