கரு, சஜித்துக்கு சம பொறுப்புக்கள் ; ஐ.தே.க. தீர்மானம்

எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரமும் பொறுப்புக்களும் ஐ.தே.க.தலைமைத்துவச் சபைத் தலைவர் கரு ஜெயசூரியவுக்கும்,பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கும் வழங்கப்பட்டிருப்பதாக ஐ.தே.க.அறிவித்துள்ளது.
இதற்கான விஷேட குழுவொன்றையும் ஐ.தே.க.அமைத்துள்ளது.கரு மற்றும் சஜித் அடங்கிய இக்குழுவே ஊவாவின் பிரசார நடவடிக்கைகள் மற்றும் இத்தேர்தல் தொடர்பிலான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
‘ ஊவாவில் இருந்து வறுமையை விரட்டுவோம் ‘ என்கிற தொனிப்பொருளிலேயே இம்முறை இங்கு பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள ஐ.தே.கவின் பதுளை மாவட்ட பிரசாரக் கூட்டம் ரணில் தலைமையில் இம்மாதம் 16ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Related

உள் நாடு 5496033333079273771

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item