காணாமற்போன தேரர் சடலமாக மீட்பு -அஹங்கமையில் சம்பவம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_113.html
அஹங்கம, உக்ஹல்வல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த தேரர் ஒருவர் காணாமற்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூக்கிட்ட நிலையில் குறித்த தேரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
45 வயதான தேரர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. - அத தெரன