போதைப் பொருள் வர்த்தகத்தில் மூன்று அமைச்சர்கள் - பொது பல சேனா
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_288.html
இலங்கையில் நடைபெறும் பாரியளவிலான போதைப் பொருள் மற்றும் மதுபான வர்த்தகத்துடன் அமைச்சர்கள் தொடர்புபட்டிருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்துடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மூன்று பேரும் ஒரு மாகாண சபை அமைச்சரும் தொடர்புபட்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஞானசார தேரர் எச்சரித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் சட்டவிரோத எதனோல் (மதுபான மூலப்பொருள்) வர்த்தகத்துடன் தொடர்புடைய மூன்று அமைச்சர்கள் தொடர்பாகவும் எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக எங்களுக்குத் தகவல் தரும் நபரொருவரை அமைச்சர் ஒருவரின் புத்திரர் மிரட்டியுள்ளார். அது தொடர்பில் நாங்கள் விரைவில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.