முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது போல, பௌத்த விகாரைகள் தாக்கப்பட்டால்..?

இலங்கையில் காவி உடை தரித்தவர்கள் பௌத்த மதத்தின் கோட்பாடுகளுடன் கௌரவமாக நடந்து கொள்ளாததே அளுத்கம மற்றும் பேருவளை அசம்பாவிதங்கள் நடைப்பெற காரணமாகும் என சீலரத்ண தேரர் தெரிவித்துள்ளார்.

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இவ்வாறான கருத்தை சீலரத்ண தேரர் வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது போல் பௌத்த விகாரைகள் இரண்டு தாக்கப்பட்டால் இந் நாட்டின் நிலைமை என்னவாகும்?

எனவே பௌத்த பிக்குகள் தங்களின் மத கோட்பாடுகளுடன் , எந்த மதத்தையும் விமர்சனம் செய்யாது வீதியில் இறங்கி அரசியலில் பங்கு பற்றாமல் இருப்பதே மேல் ,இலங்கை அனைவருக்கும் சொந்தமான நாடு எனவே நாம் இன , மத பேதம் பார்த்து செயற்படக்கூடாது எனவும் அவர் தெரிவித்தார். - JM

Related

உள் நாடு 3838568902500985176

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item