காஸா தாக்குதல்களின் போது இஸ்ரேலுக்கு தொழில் நுட்ப உதவியளித்த SONY நிறுவனம்
http://newsweligama.blogspot.com/2014/08/sony.html
காஸாவில் இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களுக்கு தொழில் நுட்ப உதவிகள் அளித்ததன் மூலம் SONY நிறுவனம் காஸா தாக்குதல் மீதான தனது நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.
சர்வதேச ஊடகம் ஒன்று இஸ்ரேலின் ரொக்கட் ஒன்றின் பகுதியை ஆராய்ந்த போது அதில் SONY நிறுவனத்தின் கமராக்கள் மற்றும் ரொக்கட்களை துல்லியமாக கட்டுப்படுத்தும் அலகுகள் பொருத்தப்பட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது.
இதில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அலகுகள் இஸ்ரேல் விமானங்களுக்கு இலகுவாகவும் துல்லியமாகவும் இலக்குகளைத் தாக்க வழியமைத்துக் கொடுத்துள்ளது.