தொடரும் கடும் மழை - காலியில் வீதிகள் நீரில் மூழ்கின
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_127.html
இலங்கையில் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணம், சபரகமுவ மகாணம் மற்றும் தென் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலை நாட்டில் நேற்று இடக்கிடை கடும் மழை பெய்துள்ளதுடன் அங்கு பனி மூட்டத்துடன் கூடிய நிலை உருவாகியுள்ளது.
அத்துடன் மலையகப்பகுதியில் மழை பெய்து வருவதால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாகவும் வாகன சாரதிகள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் காணப்படும் நேரங்களில் வாகனங்களின் மின் விளக்கை எரியவிடுமாறும் கேட்கப்படுகிறது.
இதே நேரம் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் கடும் மழை காரணமாக காலி நகரை அண்டிய பகுதிகளில் உள்ள வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. கலகெதர, கஹ்துவவத்த, கராப்பிட்டிய போன்ற பகுதிகளே நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.