பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஹரீன் இராஜினாமா
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_14.html
ஐக்கிய தேசியக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னான்டோ இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்தார்.
பதுளை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவான ஹரீன் எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதை நோக்காகக் கொண்டே இப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உவா மாகாணத்துக்கான் முதலமைச்சர் வேட்பாளராக ஹரீன் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய ஹரீன் எம்.பி, ஊவா மாகாண மக்களினதும் நாட்டு மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.