14 வயது சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த 4 பேர் கைது - களுத்துறையில் சம்பவம்
http://newsweligama.blogspot.com/2014/08/14-4.html
களுத்துறைப் பிரதேசத்தில் 14 வயது சிறுமிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்த நாங்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் களுத்துறை வடக்கிலுள்ள இரப்பர் தோட்டம் ஒன்றிலும் களுத்துறை வடக்கிலுள்ள ஹோட்டல் ஒன்றிலும் குறித்த 14 வயது சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் இலங்கைக் கடற்படை வீரர் ஒருவரும் உள்ளடங்குகின்றார். அத்துடன் குறித்த சம்பவத்துடன் இராணுவ வீரர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் போது அவற்றை விடியோ செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 7ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்படுள்ளனர்.