பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாக களமிறங்கும் – ஹசன் அலி
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_49.html
ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக முஸ்லிம் கவுன்சில் ஆகியன கூட்டாக இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளன.
பதுளை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.
இதற்கமைய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக முஸ்லிம் கவுன்சில் ஆகிய தரப்பினருக்கு இடையே இன்று புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்படுகிறது.
இன்று பிற்பகல் பதுளை மாவட்டத்திற்கான வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
தமது கூட்டணி பதுளை மாவட்டத்தில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். - NewsFirst