ஹமாஸ் இயக்கத்தின் எச்சரிக்கைகள் தம்மை பாதிக்கவில்லை- பெஞ்ஜாமின்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_143.html
ஹமாஸ் இயக்கத்தின் எச்சரிக்கைகள் தம்மை பாதிக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜாமின் நெட்டன்யாஹு கூறியுள்ளார்.
எதிர்கால யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பலஸ்தீனர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடின் நீண்டகால யுத்தத்தை இஸ்ரேல் எதிர்கொள்ள நேரிடும் என ஹமாஸ் இயக்கம் எச்சரித்துள்ள நிலையில் இஸ்ரேல் பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐந்துவாரமாக தொடர்ந்த பரஸ்பர மோதல்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்திற்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஐந்துநாள் யுத்த நிறுத்தம் நாளையுடன் நிறைவடைகின்றது.
இந்த நிலையில் மீண்டும் யுத்த நிறுத்த இணக்கப்பாட்டை எட்டும் வகையில் எகிப்தின் மத்தியஸ்தத்துடன் இஸ்ரேலும் ஹமாஸ்சும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கதாகும்