அரசியலில் பிரவேசித்தால் வீட்டிலிருந்து வெளியேறவேண்டி ஏற்படும் - மஹேல
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_194.html
2015 ஆம் ஆண்டின் சர்வதேச கிரிக்கட் சபையின் உலகக்கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டியே தமது இறுதியான சர்வதேச கிரிக்கட் சுற்றுப்போட்டியாக இருக்கும் என்று டெஸ்ட் கிரிக்கட்டில் இருந்து இன்று விலகிய மஹேல ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்
ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற அவர்,தாம் இலங்கையின் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று குறிப்பிட்டார்
அதேநேரம் கிரிக்கட் பயிற்றுவிப்பாளராகவும் செயற்படப்போவதில்லை என்று மஹேல ஜெயவர்த்தன தெரிவித்தார்
அரசியல் பிரவேசத்தில் ஈடுபட்டால் தாம் வீட்டில் இருந்து வெளியேறவேண்டியேற்படும்
அதேநேரம் கிரிக்கட் பயிற்றுவிப்பாளராக செயற்படுவதற்கு தமது பொறுமை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
மஹேல ஜெயவர்;த்தன, 149 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்று 34 நூறு ஓட்டங்களுடன் 11 ஆயிரத்து 814 ஓட்டங்களை பெற்றுள்ளார்