ஞானசாரவுக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள்?

பொது பல சேனா பேரினவாத இயக்கத்தின் செயலாளரும் உலக பௌத்தப் பயங்கரவாதத்தின் முகம் என சர்வதேச ரீதியில் அறியப்பட்ட விராதுவின் உற்ற தோழனுமான இலங்கையின் பயங்கரவாதி ஞானசார தன் இஷ்டப்படி அமைச்சர்களைக் குறி வைத்துக் கேவலப்படுத்துவதை எதிர்ப்பதற்கு தனித்தனியாக முயலாமல் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ஓரணியாகத் திரள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு நெருக்கமான தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அளுத்கம விவகாரத்தைத் தொடர்ந்து ஜனாதிபதியின் அனுமதியுடனேயே ஞானசாரவிடம் 1 கோடி நஷட ஈடு கோரி அமைச்சர் ராஜித வழக்குத் தொடர்ந்துள்ளதாக அறிவித்துள்ளமையானது ஏற்கனவே ஞானசாரவின் கொடுஞ்சொற்களுக்குள்ளான அமைச்சர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டியிருப்பதாகவும் எனவே அனைவரும் ஓரணியில் திரள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே அமைச்சர் ரிசாத் பதியுதீன் 500 மில்லியன் நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்ததோடு அமைச்சர் டிலான் பெரேராவும் பகிரங்கமாக ஞானசாரவுக்கு சவால் விட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

உள் நாடு 8979951472702103745

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item