விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் வெளியேற விருப்பம்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_255.html
லண்டன்,ஈக்வடோர் தூதுவராலயத்தில் தஞ்சம் அடைந்திருக்கும் பிரபல விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகரும்,ஆசிரியருமான ஜூலியன் அசாஞ்ச் அங்கிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால்,அவர் எங்கே செல்லப் போகிறார் என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பெண்டகன் ரகசியங்களை வெளியிட்டதன் அடிப்படையில் மரண அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டிருக்கும் இவர் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து மேற்படி லண்டன் – ஈக்வடொர் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது