யுத்த காலத்தில் ஞானசாரர் எங்கேயிருந்தார்? – மேர்வின்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_676.html
இராணுவம் யுத்தத்ததை முடித்த பின்பே சண்டியர்கள் எல்லோரும் வெளியே வந்திருக்கிறார்கள்.யுத்த காலத்தில் இந்த ஞானசார தேரர் எங்கேயிருந்தார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர் மேர்வின் சில்வா.
பொதுபலசேனா குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
பணத்தையும் இன்னும் பல தேவைகளையும் அடைந்து கொள்வதற்காக காவி உடை தரித்திருக்கும் இதுபோன்ற சிலரால் காவியின் உண்மையான புனிதம் கெடுவதாகவும் அவர் அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
பொதுமக்கள் தொடர்பு மற்றும் பொதுமக்கள் விவகார அமைச்சரான மேர்வின் சில்வாவுக்கு அதற்குப் புறம்பாக,கடந்த வார வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக குறைந்த வருமானம் பெறுவோர் நல மேம்பாடு குறித்த அமைச்சு அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.