ரணில் விக்கிரமசிங்கவின் டுவிட்டர் பதிவுகளை போன்று போலி பதிவுகள்
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_271.html
இலங்கையின் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கை ஆரம்பித்துள்ள நிலையில் பொய்யான சுயதகவல்களுடன் சில குழுக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரில் கணக்குகளை திறந்துள்ளன.
இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் பதிவுகளை குழப்பும் நடவடிக்கைகளை அவர்கள் நோக்காக கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போலியான டுவிட்டர்களில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சில பதிவுகளில் ( குட் மோனிங் ஸ்ரீலங்கா இன்று நான் பிரயோசனமான வேலையை செய்யவேண்டும். வீட்டை கூட்டிப்பெருக்கப்போகிறேன்.
இன்றைய நாள் வேலைப்பளுவான நாள்” என்ற பதிவுகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. “திடீர் என்று எழும்பினேன். எனினும் செய்வதற்கு எதுவும் இல்லை. யோசனையும் வெறுமனே உள்ளது. அலரி மாளிகைக்கு சென்றால் இவ்வாறு யோசிக்க தேவையில்லை”
“மைத்திரியிடம் கேட்டபோது மக்கள் என்னுடன் இணைந்து போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். எனவே மைததிரி எனக்கு வாக்கு போடுவாரா? என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது” போன்ற பதிவுகள் ரணில் விக்கிரமசிங்கவின் போலி டுவிட்டர் பதிவுகளில் எழுதப்பட்டுள்ளன.
எனினும் இது தொடர்பில் தாம் இன்னும் அறிந்திருக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.