மாளிகாவத்தையில் தெளஹீத் ஜெமாஅத் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_276.html
தௌஹித் ஜமாஅத், பொதுபல சேனா மற்றும் சிங்கள ராவய ஆகிய அமைப்புக்களுக்கு கொழும்பு, கோட்டை பகுதிகளில் இன்று புதன் கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஶ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் மாளிகாவத்தையில் தற்போது இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இவ் ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டுமன்றி,இப்பகுதியில் போக்குவரத்தும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இப்பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,சற்றைக்கு முன் இந்த இடத்துக்கு வந்த பொதுபலசேனா ஆதரவாளர்கள் பொலிஸாரால் அடித்துக் கலைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புறக்கோட்டை காவல் துறையால் நீதிமன்றத்தில் விடுக்கப்பட்ட தெளிவுப்படுத்தலுக்கு அமையவே மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. - DailyCeylon