இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கட் அணி திருப்பி அனுப்பப்பட்டது

நட்பு ரீதியிலான போட்டி ஒன்றில் பங்கெட்டுப்பதற்காக இந்தியா சென்ற இலங்கையின் 15 வயதுக்குற்பட்ட கிரிக்கட் அணி ஒன்று மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்தியாவுக்குச் சென்ற குறித்த கிரிக்கட் அணி இன்று காலை திருப்பி அனுப்பப்பட்டதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அணியினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என சென்னைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் எழுச்சி பெறும் இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பங்கு கொள்ளும் போட்டி நாளைய தினம் நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

உள் நாடு 5528298050714435849

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the week

cartoon

Popular Posts

item