மகளை இரும்புச் சங்கிலியால் கட்டிவைத்து துன்புறுத்திய தாய் கைது
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_50.html
கட்டான மடம்பெலல்ல பகுதியில் 10 வயது மகளை இரும்புச் சங்கிலியால் கட்டிவைத்து துன்புறுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கூலி வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து செல்லும் சந்தேகநபர், தனது மகளை இரும்பு சங்கிலியால் கட்டிவைத்து செல்கின்றமை விசாரணைகளில் தெரிவந்துள்ளது.
கொச்சிக்கடை கட்டான பகுதியிலுள்ள வீடொன்றின் இருட்டறைக்குள் குறித்த சிறுமி இரும்பு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரினால் மீட்க்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் நான்கு வயது சகோதரர் அருகிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். - NewsFirst
தொடர்புபட்ட செய்தி: http://www.weligamanews.com/2014/08/blog-post_72.html
தொடர்புபட்ட செய்தி: http://www.weligamanews.com/2014/08/blog-post_72.html