உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை - உபுல் ஜயசூரிய குற்றச்சாட்டு
http://newsweligama.blogspot.com/2014/08/blog-post_324.html
உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள காரணத்தினால், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தியோகபூர்வமாக கோரியிருந்தேன்.
எனினும், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க நீதிமன்றில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க நீதிமன்றில் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.
சிவில் உடையணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீட்டின் அருகாமையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்தது.
கடந்த ஜூலை மாத் 15ம் திகதி முதல் சில தடவைகள் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
நாட்டின் சாதாரணப் பிரஜைகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் என நீதிமன்றில் முறைப்பாடு செய்தால் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 22ம் சரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சட்டமே எனக்கு வழங்கப்பட்டுள்ளது.
வனாத்தமுல்ல பிரதேசத்தில் கொலையுண்ட ஒரு சந்தேக நபரின் சகோதரருக்கு ஆறு பேர் கொண்ட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.